Thursday, September 22, 2011

வாத்தியார் ஸ்டைல்


செப்டம்பரில் வரும்  ஆசிரியர் தினம்.. ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிந்த வகையில் இன்றைய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
 
சுவற்றில் எழுதாதே என்று எழுதி வைத்த காலம் போய் என் சுவற்றில் எழுதுங்கள்.. என்று கெஞ்ச்சிக் கூத்தாடும் நிலை இன்று.

 
fb ல் ஆசிரியர் தின வாழ்த்துகளாய் சிலரும், தங்கள் ஆசிரியரின் புகைப் படங்களோடு சிலரும், Profile Photo வையே டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஃபோட்டாவாய் மாற்றியும் விட்டனர் சிலர்....
 
அப்போ நாமளும் ஏதாவது செய்யனுமில்லே ? இல்லாட்டி சமூகத்தை விட்டு விலகின மாதிரி இல்லே இருக்கும்

நானும் என் ஆசிரியர்கள் பத்தி யோசிச்சேன்

பரமக்குடியில் தமிழ் பாடத்தை அறிவியல் போல் நடத்திய திரு இராமச்சந்திரன் அவர்களால் தான் என் தமிழ் ஆர்வம் இன்னும் குறையாமல் இருக்கு
..??.
??..
மேல் நிலையில் என்னை மேலும் தூக்கி விட்ட ஆ வை பள்ளியின் மணி சாரை மறக்க முடியுமா

ஆனா வாத்தியார் என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நம்ம புரட்சித் தலைவர் தான்
சோ தான் வாத்தியார் என்று பெயர் வைத்தார் என்று நினைக்கிறேன். (நம்நாடு, எங்கள் தங்கம்..இப்படி பல படங்களில் சோ வை வாத்தியாரோடு பாக்கலாம்.) 

என்னோட இப்போதைய வாத்தியார்... கம்பர் சார் தான்.. .. கம்பர் சார்... இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? ராமாயணத்தில் ஏதாவது வாத்தியார் ஸ்டைல் இருக்கா.. சொல்லுங்க வாத்தியாரே.......

கம்பர் தொடர்கிறார்

நீங்க ரோட்டோரம் போயிட்டே இருக்கீங்க
 
உங்களுக்கு சம்பந்தமே இல்லாமே யாரோ சிலர் ஒரு ஃபிகரை ஈவ் டீசிங்க் செய்ராங்க

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ்சமத்து
ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

வாத்தியார் ஸ்டைலைக் கண்டுபிடித்தவர் கம்பர் தான் என்கிறேன் நான்
.. அப்போ நீங்க என்ன செய்வீங்க?? அந்த தடிப் பசங்களோட சண்டை போடுவீங்க.. அடி உதை கூட வாங்குவீங்க.. ஏன் உயிரைக் கொடுக்கவும் தயாரா இருப்பீங்க.. உலகமே இப்படி இருக்க நான் என்னை நம்பி வந்த சீதையின் துயரை போக்க முடியாத ஆளாயிட்டேனேன்னு இராமன் புலம்புறார்... ..
என்ன
... வாத்தியாரே... நீங்க என்ன சொல்றீங்க...???

ரெண்டிலெ ஒண்ணு பாத்திடலாம்

. சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். ரெண்டில் ஒண்ணு அல்லது அதுக்கு இது பரவாயில்லை மாதிரி வந்து சேரும். .... அதான் வேறு வழி இல்லாமே இவளைக் கை பிடிச்சேன் என்று பேரன் பேத்தி வரும் வரையிலும் சொல்லிப் புலம்பும் ஆளைப் பாத்திருக்கோம்..... அதான்... முகநூலில் எழுதிட்டே கெடக்கான் என்ற நல்ல பேரும் (!!) எனக்கு உண்டு. Facebook ல் எழுதாதவர்கள் வேறு என்ன வெட்டி முறித்து சாதனை செஞ்சிட்டாகன்னு அவங்க தான் சொல்லனும்.... அதை என்னிடம் சொல்லு... என்னை விட்டு வேற யாரு என்னைத் தொடுவா?? என்று ஒரு சூப்பர் டி எம் எஸ் பாட்டு இருக்கு.. தலையை தலையை ஆட்டி சிவாஜி பாடும் பாட்டு இத்தனை ஆண்டுக்கு பின்னாடியும் மனசுக்குள் என்னமோ செய்யும்.
இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும்

ரெண்டிலே ஒண்ணு பாத்துட்டுத் தான் மறுவேலை என்று சொல்வதும் இதுக்குத்தானே

எனக்கு இருந்ததே ரெண்டு வழி தான்

இவனுக்கு வேறு வேலை இல்லை போல

இரண்டில் ஒண்ணு

ஆனா இந்த ஆப்ஷன் சமாச்சாரத்தில் இன்னும் ஒரு நல்ல சங்காத்தம் இருக்கு. நாலு பதிலில் மூனு இல்லை என்று தெரிந்தாலும் போதும் சரியான விடைக்குப் போய் விடலாம்.

அப்படித்தானே பாதி பேரு கோன் பனேகா க்ரோர்பதியில் லாக்பதி ஆகி வருகிறார்கள். .. எண்டரன்ஸ் எழுதி ஓய்ந்து போனவர்களின் தகப்பன் தாய்க்கு அந்த வலி நல்லாவே தெரியும். . ஒரு அண்ணாவுடன் ஒரு மூலிகை தேடும் படலத்தில் நானும் களம் புகுந்தேன். கிட்டத்தட்ட நாலு மணி நேரம் தேடி இருப்போம். கடைசியில் நான் பொறுமை இழந்து கேட்டேன்... அந்த மூலிகை இலை எப்படி இருக்கும்? என்று. ?? . ... .படிச்சதாலே கொஞ்சம் நிர்வகம் பத்தியும் எழுதியாக வேணுமே!!! . . அதில் VRS வாங்கி வந்து Travels நடத்தும் மனிதரின் டர்னோவர் கோடிக்கு மேலாம். அதன் முதலாளி ஞாயிறு அன்று ஓட்டுனர் இல்லாததால் அவரே ஓட்டி வந்தார் பூனேயில். அஞ்சு பத்துக்கு அல்லாடும் ஆளுக்கு கோடீஸ்வரர் டிரைவர். கையில் ஐ பேடு இருந்தது ஒரு கொசுறுத் தகவல்., என்னைத் தூக்கம் எப்படித் தொடும்?? உங்களுக்கு வருமா என்பது எனக்குத் தெரியாது.. என்னோட ராமாயண மெயில்கள் இல்லாமல் கொஞ்ச நாளா மக்கள் நிம்மதியா தூங்குவதாய் அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.... . ரெண்டு பேரும் ஹீரோக்கள் தான். ஆனா ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சோகம்... ரெண்டு பேரும் மனைவியைப் பிரிந்தவர்கள்...
இந்த தப்பான பதிலுக்கு நெகட்டிவ் மார்க் போடும் சமாச்சாரம் தான் உலகத்தில் உதைக்கும் உத்தி

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நடந்த சம்பவம்

எனக்கு கிடைத்த பதில் என்ன தெரியுமா

தெரியாது

இப்படித் தான் பலர் வாழ்க்கை எனும் வண்டி ஓடிண்டிருக்கு என்ன செய்வது எங்கே போவது என்று கூட தெரியாமல்

MBA

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும்

சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஜெஸ்டெட்டனர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது

இவ்வளவு சொன்ன பிறகு ராமாயணத்தை தொடாமல் விட்டால்

இராமாயண காட்சி

பிரபுவும் கார்த்திக்கும் மோதுவது மாதிரியான இடம்

ராமனும் சுக்ரீவனும் தான் நான் சொல்லும் ஹீரோக்கள்

அனுமன் நைஸா ஆரம்பிக்கிறார். .. ராசா... (சுக்ரீவனைப் பாத்து தான்) இவங்களைப் பாத்தா உங்க Better half ஐ தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரியுது. என்கெஸ்கிறார். ... , இந்த ஆளே பெண்டாட்டி பறி குடுத்த ஆளு. இந்த மணுஷன் நம்ம பார்ட்டியை கண்டு பிடிச்சி தருவாரா???

சுக்ரீவனோ

ஆனா என்ன.. "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா... நெஜமாவே என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா" என்று புலம்பா குடும்பஸ்தர்கள்.. பொண்டாட்டிகளை ஊருக்கு அனுப்பிவிட்டு facebook ல் வலம் வரும் அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போல்... .
.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது... வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது.... யாரு மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது...?... நல்லா பதில் தெரிஞ்ச கேள்விக்கு மொதல்லே பதில் எழுதலாம்னு தானே தோணும் எல்லாருக்கும்??... அதே தான் அந்த ரெண்டில் ஒரு ஆப்ஷன் தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.. சீதை இடம் எங்கே என்பதே ஒன்னும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிஞ்ச இடத்துக்கு உடன் போவோம். இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆரம்பம்.. ... (அதுக்காக பொண்டாட்டியை தொலைச்சிட்டு வந்து நிக்காதீங்க). பிரச்சினைகளை இப்படி அலசி பாத்து முடிவு எடுங்க...... இது உங்களுக்கு டெஸ்ட்.. யாராவது பாட்டு புடிச்சு சொல்லுங்க பாக்கலாம். ...

சந்தேகம்

ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு

அடுத்த கேள்வி

நம்ம எக்ஸாமிலே என்ன செய்வோம்

அதே

ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம்

நீங்களும் இப்படி யோசிச்சி முடிவு எடுங்க

கம்பர் பாட்டு
ஹி ஹி
  .... இப்படியும் தொடரும் (புரட்டாசியில் எது செய்தாலும் புண்ணியம் தானே???)
இதுவும்

கமப ராமாயணம் கையில் இல்லாமல் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய சுந்தரகாண்டம் படிதத்ததின் விளைவு தான் இந்த போஸ்டிங்..

காக்கை உக்கார பனம்பழம்...

ழ் சினிமா வரலாற்றில் ஒரு இமாலய உயரத்தை எட்டியவர் தான் TMS. அவரின் கலையுலக பயணத்தை நிறுத்தியது எது? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அவரது குரல் வளத்தில் குறையொன்றும் இல்லை இன்றுவரை. உள்ளம் உருகுதைய்யா என்று உள்ளம் உருகப் பாடியதை தினமும் கேட்ட முருகனும் ஒண்றும் செய்ய முடியாதவராய் ஆகி விட்டார். TMS "என் கதை முடியும் நேரம் இது...." என்று பாடியதால் இப்படி ஆனது என்றார்கள்... ஆனால் இதை ஏற்றுக் கொள்ளவா முடியும்?. TMS பாடாத சோகப் பாடலா?, சோதனை மேல் சோதனை, எங்கே நிம்மதி?... இப்படி பல இருக்க, இந்த என் கதை முடியும் நேரம் அந்த கெட்ட பேரை எடுத்துக் கொண்டது. "நான் ஒரு ராசியில்லா ராஜா.." என்ற பாடலும். பாட சற்றே சிரமமான பாட்டாய் இருந்தாலும் நான் கொஞ்சம் இதை நல்ல விதமாய் (கரோக்கியில் தான்) பாடிக் காட்ட... இதை மேடையில் பாட வேண்டுகோள் வந்தது.. நான் யோசிக்கிறேன்... மேடைக்கு ராசி இல்லாதவன் ஆயிட்டா?? இந்த குரூப் அதுக்கு எப்படி ரியாக்ட் செய்யுதுன்னு பாக்கலாம். . ... மண்வெட்டித்தலையா ... என்று பேசி வலம் வந்த கவுண்டமனி செந்தில்களை எந்த வார்த்தையும் ஒன்றும் செய்யவில்லை. ... சிவனுக்கே நல்ல காலம் இன்னும் வராமல் இருக்கு. . மேல்மருவத்தூருக்கு 40 கிமீ முன்பு ஓர் ஊர் கடந்து போனது.. பாதிரிப்புலியூர். இதைப் படித்தவுடன், அடடா... தேவரத்தில் இந்த ஊர் சிவன் பத்தி, ஒரு பாட்டு இருக்கே.. அதைப் பாத்துட்டு வரலமேன்னு திருப்பினேன் வண்டியை. , பாழடைந்த கோவில்... பரிதாபமாய் நந்தியும் சிவனும்.. கோபுரங்கள் எல்லாம் சாய்ந்து இருந்தது. அதே பாட்டை பாட உள்ளே சென்றால் வௌவ்வால் மணத்துடன் சின்னதாய் விளக்கும்... அங்கே அதே சிரித்த முகத்துடன் சிவன். , தேவாரத்தில் தீவட்டித்தலையா... உன் தலையில் கொள்ளி வைக்க என்பது போல் தோன்றும் பாட்டு இது.. .. .. கடவுளுக்கே இந்த நிலையா?? .. ... இம்புட்டு நாளும் நான் தான் கிளைமாக்ஸில் வந்து போவேன்.. இன்னெக்கி எப்படி தேவாரம் வரலாம்?? ... இந்த சிச்சுவேஷனுக்கு உங்களால் பாட்டு தர முடியுமா?? ...  அறுபது ஆயிரம் மனைவிகள், அதிகாரப் பூர்வமா மூன்று மனைவிகள்.. நிறைவாக நரை தெரியும் வரை ஆட்சி (மூன்று மனைவிகள் இருந்தால் அந்த பாக்கியம் தானா வருமோ???) பிள்ளை இல்லையேன்னு ரொம்ப கவலைப்பட்டுக் கிடந்தேன் பலகாலம். ... . அதுக்கப்புறம் தான் வந்தான் ராமன் . என் தலையில் இருக்கும் பாரத்தை அவன் கைக்கு மாத்தனும். நான் நெறைய கஷ்டப்பட்டேன்..  . அவனும் கொஞ்சம் கஷ்டப் படட்டும்.. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமான்னு நெனெக்கிறென். இனி ராமனும் கஷ்டப்படட்டும்... ன்னு  சொல்கிறார்
தமி

காகம் உக்கார பனம்பழம் விழுந்த கதையாய்

இதே ஜாதியில்

சில வார்த்தைகள் அவை அந்த அர்த்தத்தில் சொல்லப்படா விட்டாலும் ஏதோ ஒரு காரணம் கருதி அந்த வார்த்தை வந்து விழுகலாம்

பண்ணித் தலையா

ஆனா அதே வார்த்தையை தேவரத்தில் சொல்லப் போக

சமீபத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன்
விசாரித்து போனால்

கவுண்டமணி செந்திலை திட்டுவது போல்

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே
வழுவாது இருக்க வரம் தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய் பாதிரிப்புலியூர்
செழுநீர் புனர் கங்கை செஞ்சடை மேல் வைத்த தீ வண்ணனே

தீ வண்ணன் நிலை பாத்தா கண்ணீர் வந்தது

கம்பர் திடீரென்று தேன்றினார்

இது ரொம்ப தப்பு

என்ன சொல்றீங்க கம்பரே
கம்பர் ஏமாற்றவில்லை

நீ TMS க்காக இப்படி கவலைப் பட்டு கேக்குறே... இங்கே தசரதன் வாயிலிருந்து வரும் வார்த்தை பாரு. பட்டபிஷேகத்துக்கு முன்பு வந்து விழுந்த வர்த்தைகள்.. ராமன் படப்போகும் சிரமத்தின் எச்சரிக்கை மணிகளா??/

தசரனுக்கு
 
மைந்தரை இன்மையின் வரம்பு இல் காலமும்
நொ
ந்தனென் இராமன் என் நோவே நீக்குவான்
வந்தன
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன்.
ன் இனி அவன் வருந்த யான் பிழைத்து

இப்பொ சொல்லுங்க  ??

நான் ஒரு ராசியில்லா ராஜா பாட்டு பாடித்தான் ஆகனுமா
.

புகை நமக்குப் பகையா???

முன் குறிப்பு: நான் இன்னமும் புகை பிடிக்கும் கெட்ட பழக்கத்தை ஆரம்பிக்க வில்லை]??? எந்தப் படம் பாத்தாலும், இந்த அறிவுரை தான், நடு நடுவுலே வருதே...??... Cancer Danger Poison என்கின்ற பெயரிலும் புகைகள் செமையாய் விற்பனை ஆகின்றன. நம்ம ஆட்களுக்கு எது வேண்டாம்ணு சொல்றோமோ அதில் தான் ஈர்ப்பு அதிகம் ஆகும் போலத் தெரியுது.... அதை மறைக்கிறார்களோ அதை திருட்டுத் தனமாய் எட்டிப் பார்ப்பதில் அலாதி சுகம் தான். (எந்த விஷயத்தையும் அளவோடு தான் வச்சிக்கனுமாம்... Advice, ஜாலி, குரூப், போஸ்டிங்க், கிண்டல்,காதலி, சில்மிஷங்கள் etc etc..etc) ... என்ன இது ராமாயணம் மாதிரி இழுக்குறே என்பார்கள்... (அப்போ ராமாயணம் பத்தியே எழுதும் போது இழுவைக்கு குறை இருக்குமா என்ன??)... புகைக்கும் தொடர்பு உள்ளதாம். இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை..இறுதி என்பது சிகரெட் முடியும் வரையா??. உயிர் போகும் வரை - இது தான் அதன் அர்த்தமாய் இருக்கனும். சட்டைப்பையில் விவேக் சிகரெட் இருப்பதை மோந்து பாத்து... ஐய்யயோ... அந்த சிகரெட்டா... குப்பை லாரி நாத்தம் வருமேடா.... உன் பக்கத்தில் உன் மனைவி எப்படி வருவா?? குழந்தை எப்படி வரும் ? என்பார்.
Tamil Nadu Agricutural Unversity மாதிரி Tamil Nadu கஞ்சா Unversity தொடங்கி, அதில் நம்ம கஞ்சா கருப்பை விசி ஆக்கியிரலாமா என்ன??, புகையினால் அரசுக்கு வரும் வருமானத்தை விட புகை சார்ந்து வரும் நோய்களுக்கு அரசு அதிகம் செலவு செய்கிறது என்பது தான் உண்மை...... அவங்க பாட்டுக்கு புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தட்டும்...நம்ம பாட்டுக்கு இதிலே ஏதும் புதுக் கவிதை இருக்குதான்னு தேடலாம். .

சூப்பரா இருக்கில்லே

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா

நீங்க நினைக்கும் புகை வேறு

ஒண்ணும் புரியலையே

வாங்க அப்படியே அயோத்திக்கு ஓப்பன் ஜீப்புலே போவோம்

அயோத்தி ஒரே புகை மண்டலமா இருந்ததாம்

அன்னதானம் செய்யும் பொருட்டு சமையல் செய்து
கரும்பு ஆலையில் இருந்து வரும் வாசம் மிகுந்த புகை
.. ஆனா கூடவே பிறந்த விரல் சுடாது. இந்த ஆறாம் விரல் அல்ப நேரத்துக்கு அப்புறம் சுடும்.?? கம்பர் ஒரு புகை ஆதரவாளர்... ஒரு புகை இல்லை... நாலு புகைக்கு ஆதரவு தருகிறார்... ஒரு புகையே இவ்வளவு குமட்டும் போது நாலு புகை.. தாங்குமடா பூமி..?? ... கம்பர் நேசிக்கும் புகை வேறு... அறம் பொருள் இன்பம் வீடு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புகை விரும்பியாம்....!!!.. அப்பத்தான் எல்லா புகை பத்தியும் உணரலாம்....செய்து..செய்து..அதன் புகை (அறப்புகை)(Admissible pollutant as per the Pollution Control norms) .. இது பொருள் சார்ந்த புகை.

பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகை

வேள்வியால் உண்டாகும் புகை
(சகிலா என்று மாத்தி யோசிக்காதீங்க)..இது இன்பத்தின் புகை.. இது தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வீடு சேர உதவும் புகை.இப்படி அந்த அயோத்தியே எப்போதும் புகை மண்டலமா இருந்ததாம்..

அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகில் இன் ஆலை நறும் புகை நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்
.

இப்போ சொல்லுங்க

இதில் வரும் அறம் பொருள் இன்பம் வீடு மேட்டர் மட்டும் சுகி சிவம் பேச்சிலிருந்து ஒட்டு கேட்டு சுட்டது
. இந்த புகை.. பகையா??.
இழுக்க இழுக்க இன்பம்
(கம்ப)ராமாயணம் இறுதிப் பாடல் வரை... இது எனக்கு... உங்களுக்கு எப்படி இருக்கு???

[

புகை பகையா

இதென்ன கேள்வி

புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு என்று போட்டே விக்கிறாங்க

சொல்ல வந்த ஒரு விஷயத்தெ சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்தா

இழுவை
ஒரு

சிகரெட்டே இப்படி என்றால் இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.

2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு விஷயம் புரியலை
 
இந்த புகையை தடை செய்து விட்டால் என்ன குடியா முழுகி விடும்??, ர்க்காருக்கு வருவாய் இழப்புனோபாஜீயிடம் சிலர் கேட்டார்களாம்


வி

 நமது விவசாயிகளும் பணத்துக்குகாகத் தானே உழைக்கிறார்கள்?.. வினோபாவின் பதில் இதோ: பணம் மட்டும் தான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்கள் நெல் கோதுமைக்குப் பதிலாக கஞ்சா தான் பயிர் செய்திருப்பார்கள். அப்படி இல்லையே.. .......ன தொழிலை அரசே ஏற்று நடத்தலாமா??? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு....

அப்போ இதே விட வருமானம் வரும் பல
அப்போ

பாக்கப் போனா

இந்த புகை பத்தி சொன்னா நம்ம பகை ஆயிடுவோம்

இருவிரல்
நடுவில்
திடீரெனத்
தோன்றும்
ஆறாம் விரல்

இது தான் உங்க ஊர்ல ஃபுல் பேண்டா??

1980களில் மிக பாப்புலரான கவுண்டமனி செந்தில் டயலாக்கில், இந்த ஆஃப் பேண்ட் பத்தின சர்ச்சையும் ஒண்ணு. (இதை விட சுவாரஸ்யமான சமாச்சாரம் ... கவுண்டமனி, அப்பாவியாய் மூஞ்சி வைத்து நிக்கும் ஆஃப் பேண்ட் அணிந்த செந்திலிடம் கேக்கும் கேள்வி: "என்னைப் பாத்து ஏண்டா இப்படி கேட்டே?". அதை கொஞ்சம் விலாவாரியாக எழுதப் போக, சிலர் கண்டிக்க ஆரம்பிச்சிட்டா.... ஒகே..ஒகே.. ரொம்ப நல்ல புள்ளையா மட்டும் எழுதுவோமே..). இந்த வருஷம் ஏழாவது போனவுடன் ஃபுல் பேண்டுக்கு வந்துட்டான். அதை போட்டு போகும் போதே ஒரு கம்பீரம் வருதாம். ஏதோ மத்த 6 ம் கிளாஸ் படிக்கும் பசங்களை விட நாம ஒசத்தி என்ற feelig வருது என்கிறான். (சந்தடி சாக்கில் இன்னும் ஒரு நன்மை இருப்பதையும் சொன்னான்... நீங்க ஒரு நாள் அவசரத்தில் ரெண்டு காலில் வேற வேற மாடல் சாக்ஸ் மாட்டி விட்டீங்க..ஆனா அது இந்த ஃபுல் பேண்ட் போட்டதால் தெரியாமலே போச்சி.. தப்பிச்சேன் என்றான்.). செமினார்களில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான் அணிந்து வருகிறார்கள்.... கேப்பவர்கள் இல்லை...படம் காட்டவும் பாடம் நடத்தவும் வருபவர்கள் தான் இப்படி வருகிறார்கள். ஆனால் டி வி செய்திகளை உற்றுப் பார்த்தால் பெரிய பதவி வகிக்கும் அதிகாரிகள் இந்த முழுக்கை சட்டை அணிவதில்லை அல்லது இன் செய்வதுமில்லை..(ஒரு வேளை தொந்தி கொஞ்சம் தூக்கலாத் தெரியும் என்கிற காரணமாய் இருக்குமோ??)... Smart & face book ல் post செய்யும் ISO தரமான நபர என்பதையும் நிரூபிக்க உதவுது...: வர்ரப்போ... ஆஃப் பேண்ட் போட்டு வந்தான்..இப்போ ஃபுல் பேண்ட் போட ஆரம்பிச்சுட்டான்..இனி இன் பண்ணியிருவாண்டா.......

ஒரு முறை

மாற்றுத்துணி கைவசம் இல்லை

கைவசம் வந்து சேர்ந்த சட்டை முழுக்கை சட்டை

அட
அன்று முதல் இன்று வரை முழுக்கை இன் செய்து பெல்ட் போடும்

போன வருடம் என் அம்மா

அடுத்த முறை பரமக்குடிக்கு சென்ற போது அந்தமான் எப்படி

அடப்பாவமே

தொடைகள் தெரிய பெர்முடாஸ் போடுவது மகளிருக்கு பிடிப்பதில்லை என்பது மகளிரின் தாழ்மையான கருத்தாம்

பெர்முடாஸ் அணிவது அவ்வளவு மோசமானதா

உங்க ஊகம் சரிதான்... இப்போ நேரே கம்பராமாயணம் தான் போறேன்.... அங்கும் ஒரு அந்தமான் மாதிரி காடு.. அதில் ஒருத்தன் பெர்முடாஸ் போட்டு நிக்கிறானாம்... ஐயா... நான் சொல்லலை.. ராமாயணம் மேலே சத்தியமா சொல்றேன்... கம்பரே சொல்றார்.... .. போன்ற கருவிகள் இல்லாமலேயே தண்ணியின் ஆழத்தை கண்டு பிடிப்பவனாம் அவன். (பெண்களின் மனதின் ஆழத்தை அளக்கும் கருவி தெரிந்தால் உடன் விவேக்குக்கு சொல்லவும்). . அவன் தோலுக்கு மேட்சிங்காக...இடுப்புல புலி வால் தான் பெல்ட்டாம்.. ?..?? அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்... அவன் தான் குகன்....

காழகம்

இன்னும் ஏதாவது சிக்குமா பாக்குறேன்
- ஆஃப் டிராயர் என்று உரையாசிரியர் எழுதி வைக்க எனக்கு ஒரு போஸ்டிங்க் போட வசதியாப் போச்சி....

அடே

அங்கேயும் தொடை தெரியும் உடை. Echo Sounder

பெர்முடாஸ் கலர் சிவப்பாம்

இந்த மாதிரி காஸ்டியூம்லே எண்ட்ரி தரும் ஹீரோ எவன்

யார் அவன்

காழம் இட்ட குறங்கினன் கங்கையின்
ஆழமிட்ட நெடுமையினான் அரை
தாழ விட்ட செந் தோலன் தயங்குறச்
சூழ விட்ட தொடு புலி வாலினான்
(1987 என்று ஞாபகம்) ஒரு நண்பரைப் (நாதம் ரஃபீக்) பாக்க Long Island சென்றிருந்தேன். (பேரு தான் Long Island... அது மிகவும் சின்ன தீவு தான்). அவரைப் பாத்துட்டு அன்றே திரும்ப ஏற்பாடு. ஆனால் நண்பரும் அவரின் பக்கத்து வீட்டு ஆண்டியும் அவரின் துறுருதுறு மகளும் (அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தரம் அழைத்ததும்) கேட்டு ஒரு நாள் தங்க வேண்டியதாய் விட்டது. . நண்பன்டா என்று துணி குடுத்தான். (தோள் குடுப்பவன் மட்டுமே தோழன் இல்லை. துணி குடுப்பவனும் தோழன் தான்.). நான் அதுவரை அப்படி சட்டை போட்டதே இல்லை. ஏதோ மனீஷா கொய்ராலா அழகான ராட்சஷியே பாட்டுக்குள் நிக்கிற மாதிரி ஒரு feeling. என் உடம்புக்கு கொஞ்சம் தொள தொள ஆகி விட்டது.. எப்படி சமாளிக்க.. அட்வைஸ் வந்தது.... இன் செய் மாமூ என்று....அதுக்கு பெல்ட் வேணுமே??? சட்டை தருபவன் பெல்ட் தரமாட்டேனா??? பதில் வந்தது.executive கலாச்சாரம் தொடர்கிறது. ஒரு தொள தொள சட்டை ஓசியில் போட்டதுக்கு இவ்வளவு பில்டப்பான்னு சண்டைக்கு வராதீங்க.., மாமா, அத்தை (மமி) ஆகியோருடன் அந்தமான் வந்தார்கள். இதுவரை அவர்கள் விமானத்தை வானத்தில் அன்னாந்து தான் பாத்தவர்கள். அவர்களை விமானத்தில் பறந்து வர வைக்கணும் என்ற என் ஆசை. எல்லாம் கூடியது அப்போது.? என்று கேட்டேன். அத்தை தந்த பதில்: எல்லாம் நல்லா இருந்தது.. அங்கே ஏன் எல்லாரும் செந்தில் டிரௌசர் போட்டு சுத்துறாங்க???...அப்பத்தான் உறைக்குது.. நானும் மத்த, நான் அழைத்து சென்ற நண்பர்கள் வீடுகளிலும் அவர்கள் இந்த பெர்முடாஸ் தான் போட்டிருந்தார்கள்... இதை பரமக்குடியில் செந்தில் டிரவ்ஸர் என்று பேர் குடுத்திருப்பது எனக்கு எப்படி தெரியும்?? (வருஷத்துக்கு ஒரு வாரம் மட்டுமே ஊரில் இருந்தா.. இதெல்லாம் எப்படி தெரியும்???). - இது என் மனைவியின் கருத்து. ஆனா ரம்பா தொடை அழகை விவரிச்சி எழுதுற ஆட்கள் ரம்பாலீலா மைதானுக்கு வாங்கன்னு சொல்லிப் பாருங்க...கூட்டம் அலை மோதும்.??... அப்படியே கொஞ்சம் யோசித்தேன்..

அந்த

என் பையனோட ஸ்கூல் யூனிபார்ம் ஆஃப் பேண்ட் தான் போன வருஷம் வரை

அரைக்கை சட்டையை விட முழுக்கை சட்டை ஒரு கம்பீரம் தரும்

எப்படியோ இந்த இன் செய்யும் கலை யூத் என்பதையும்

இதைத்தான் அந்தக் கால கவுண்டமணி வாயில் வருது
இது தான் வளர்ச்சியின் உருமாற்றங்கள்

நான் முழுக்கை சட்டை போட்டு இன் செய்ய ஆரம்பித்தது ஒரு எதிர் பாராத விபத்து

படுக்கையில் பாம்பு நெளியுது...

... கொஞ்சம் கிளுகிளுப்பாய் எழுதினால் போதும்... பென்சிவேனியாவில் இருந்து.. என்ன இது மாத்ருபூதம் வாசனை அடிக்கிறதே என்ற கமெண்ட் வருகிறது.... ...படுக்கையில் பாம்பு நெளியுது என்று கூறலாமா??? அந்த பாட்டின் அடுத்த வரி... தலையனை நூறு கிழியுது.. அப்படி இருந்தால் அது படுக்கையா?? அல்லது குருஷேத்திரமா???...
பலத்த யோசனைக்குப் பிறகு தான் நான் இந்த போஸ்டை அனுப்புகிறேன்

இந்த தலைப்பும் கூட அதை ஒட்டி நினைத்து விடக் கூடாது என்பதற்குத்தான் இவ்வளவு பீடிகை

படுக்கையில் படுக்கலாம்.

இந்த யோசனையை அப்படியே வச்சிட்டு... கொஞ்சம் 1980 க்கு பின்னோட்டம் எடுக்கலாம்...... என் அறைத்தோழன் பெரும் படிப்பாளி... எப்போதும் படிப்பு..படிப்பு..படிப்பு தான். என்னைப்பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்... (இப்போ விடுவார் என்று தான் சொல்ல வேண்டும்).. காலையில் தூக்கம் கெட்டுப் போய் நன் படுக்கையில் பாம்பு மாதிரி நெளிவேன்.. படிக்கிற புள்ளையை கெடுக்கவும் எண்ணம் இல்லை. , நான் முழித்துக்கொண்டேன்.. நண்பன் வந்தவுடன்,..என்னடா இது ரூமா அல்லது தேவரடியாள் வீடு மாதிரி தொறந்து போட்டு போயிட்டியே?? என்றேன்... (இது நடந்த போது மாத்ருபூதம் பாப்புலர் ஆகாத காலம்)..

கோவையின் குளிரில் கல்லாரியில் படித்த வஸந்த காலம்

அதிகாலைக் குளிரில் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவான்

ஒரு நாள் அதிகாலை கதவை திறந்து வைத்துவிட்டு லைட் எல்லாம் போட்டு எங்கேயோ என் அறை நண்பன் போக

அப்பொவே இப்படி கேட்ட ஆளு இப்போ மட்டும் மாத்தியா யோசிக்க முடியும்?? (ஆனால் ஒன்று மட்டும் நிஜம்.. 2011 வரைக்கும் தேவரடியள் வீட்டை இன்னும் பாத்த அனுபவம் கிடையாது)... பின்னே..படிக்கிற ரூமை அப்படி சொன்னா யாருக்குத்தான் கோபம் வராது. ஒரு வாரம் என் கூட பேசவே இல்லை... இருந்தாலும் என் தூக்கத்துக்கு பந்தகம் வராமல் ஒரு கயிறு என் கட்டில் மேல் வந்தது. அதில் அறை நண்பன் துண்டு கட்டி என் முகத்துக்கு ஒளி வராமல் செய்தான். அப்புறம் படிப்பே டேபிள் லேம்ப் வெளிச்சத்திற்கு மாறியது...... இப்படி படிக்கிற ரூமை தப்பா சொல்லிட்டொமே என்று.??? அது ஒண்ணுமில்லை... கம்பராமாயணம் படிச்சேன்...... அட... இது தெரியாம நானு இத்தனை வருஷம் புலம்பிட்டே இருந்திருக்கேனே??..அந்த கம்பர் சமாச்சாரமும் தான் பாக்கலாமே..... அதி கொஞ்சம் கலங்கியுள்ளது. காரணம் ரெண்டு யானைகள் அதில் இறங்கி ஏறியுள்ளன. ஆனா அது எப்படி இருந்ததாம் தெரியுமா?? இரவில் ஆடவர் சந்தித்து செய்யும் புணர்ச்சியால் உடல் வருந்தி சோர்ந்த விலைமகளிரின் வடிவத்தை ஒத்து இருந்ததாம்..
பாட்டு புடிங்க

பொங்கு வெங் கட சரி பொதுவி ஆடலின்
கங்க்குலின் எதிர் பொரு கலவிப் பூசலில்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய்விளை
மங்கையர் வடிவென வருந்தும் மெய்யது
..:.

அப்போ நான் சொன்ன தேவரடியாள் வீடு மாதிரி சொன்னது எவ்வளவோ பரவாயில்லை போலே
....நீங்க என்ன சொல்றீங்க...

என் அறை நண்பனுக்கோ செமையான கோபம்

அன்று முதல் சற்று முன்பு வரை அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது

சரி இப்போ என்ன ஆச்சி திடீர்ன்னு
அங்கே இதே மாதிரி ஒரு வில்லங்கமான உதாரணம் வருது

சரி

இராமனின் பார்வையில் ஒரு நீர்நிலை படுகிறது