Thursday, September 22, 2011

சுகமான சுமைகள்...


இந்த கல்யாணம் இருக்கே
... ஆகலைன்னாலும் கவலை.. ஆனாலும் கவலை.. அந்த இரண்டாம் ரகம் சுகமான சுமை.. ஆனா தலைமுடி எப்படி?? அதுவும் சுமை தான்.

மயி
ர் நீக்கின் உயிர் நீக்கும் கவரிமான் என்பார்கள்??

இந்த முடி என்பது ஆண்பால் என்றே நினைக்கிறேன்
மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. இல்லாட்டி மயிரே போச்சின்னு போயிரலாம். ஆஹா... மயிர் வைச்சி என்ன ஒரு சூப்பர் மேனேஜ்மெண்ட் டெக்னிக்..!!!
. பெண்களுக்கு கூந்தல் என்று இலக்கிய சொல் இருப்பது மாதிரி ஆண்களுக்கு ஏதாவது நல்ல சொல் இருக்கான்னு தேடித்தான் பாக்கனும்.

என்னதான் ஆணுக்கு நிகர் பெண் என்று சொன்னாலும் கூட சில விஷயங்களை பெண்கள் செய்வது கொஞ்சம் சிரமம் தான்
. நான் சுஜாதா சொன்ன மேட்டருக்கு வரலை. இது முடியும் முடி சார்ந்த விஷயமும் தான். தனியாக ஒரு பெண், தனது பையனை அல்லது தம்பியை (why not a boy friend??) கூட்டிப் போய் முடி வெட்டி வருவது என்பது நெருடலான விஷயம் தான். இதை ஒரு படத்தில் (ரிதம் என்று நினைக்கிறேன்) ஹீரோயின் (மீனாவா??) அப்படியே தத்ரூபமாய் நடித்துக் காட்டி இருப்பார்.

ஒரு காரியத்தை செய்யலாமா கூடாதா என்ற குழப்பம் இருக்கும் போது அதிகம் பேர் சொல்லும் வாக்கியம் இதுவாய்த்தான் இருக்கும்

எப்படியாவது MA முடித்தாக வேண்டும் என்பவர்களின் அட்சய பாத்திரம் தான் தொலைதூரக் கல்வி. அதிலும் பல ஆசிரியர்களின் தெரிவு MA தமிழ் தான். இப்படி கணக்கு வாத்தியாராய் இருந்து தமிழ் எடுக்க வந்து சேர்ந்தார் நான் படிக்கும் பிளஸ் ஒன் வகுப்புக்கு.

ஒரு சமணத்துறவி கூந்தல் தரையில் விழ வருவதாய் பாட்டு. விளக்குகிறார் அவர்.
நான் பக்கத்து மாணவனிடம் கிசுகிசுத்தேன்

அதெப்படி கடைசி பெஞ்சில் மட்டும் எல்லா வாத்தியார்களுக்கும் கண்ணு இருக்குமோ??
எந்திரி
.. என்ன?? என்றார்.

நான் கேட்டேன்
. சமணத்துறவிகள் மொட்டை அடித்திருப்பர். இது பாட்டு தப்பா இருக்கே?? எப்படி சாத்தியம்??

அப்பொத்தான்
MA தமிழ் முடித்தவர் முழித்தார்... அடுத்த நாள் புலவர்களிடம் கேட்டு சொதப்பலாய் பதில் வந்தது. ஆனா அன்று முதல் நான் வகுப்பில் ஹீரோ என்ற "முடி"வானது.
மயிர் என்பது

காலன் அனுப்பிய தூதன் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லி இருப்பார்.

ஒரு படத்திலும் கூட விவேக் கண்ணாடியில் முன்னாடி ஒரு நரை வர

அப்புறம்...அது தான் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாச்சே??? சினேகிதர்களே... என் (ரகசிய) சினேகிதர்களே!!!

, விழுந்து கிடந்து கும்பிடுவதில் சரனாகதி தத்துவம் மிளிரும். அதே போல் சரனாகதியின் உச்சம் தன்னை இழத்தல். தன் மயிரை இழத்தல். ஒரு முடி முடிசூடிய மன்னனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் காலத்தில், முடி காணிக்கை இறைவனுக்கு தருவது பெரிய்ய செய்தி..

வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதை மொட்டை அடித்துக் காட்டுவதை விட வேறு எப்படி காட்ட முடியும்
??

சூரத்

பெங்களூரில் காலங்காத்தாலே மசுரு மசுரு என்று கூவி விற்பதைப் பாத்து அரண்டு போனேன்...

பாத்தா தயிரோ மோரோ விற்கிறார்கள்... கொஞ்சம் தள்ளி ஆந்திரா திருப்பதிக்குப் போனா... அங்கே முடி வியாபாரத்தில் கோடி கோடியாய் வருமானம் ஈட்டுகிறார் நம்ம பாலாஜி..

சமீபத்தில் முகநூலில் தலைவர்களை மயிர் கூச்சரியும் வகையில் கேள்வி கேட்டு முடி வெட்டியதாய் ஜோக்காய் வந்து கொண்டிருந்தது
.

இந்த இடத்தில் கம்பர் ஆஜர் ஆகிறார்
...

நீ ஏம்பா இப்படி தலையைப் பிச்சிகினு கீறே

நம்ம பாட்டை எடுத்து உடுப்பா.. அந்தாண்டே...

நேரே பிளைட் பிடிச்சிப் போய்
... மேகத்தை கொஞ்சம் வெட்டி எடுத்து வரனுமாம்.. (ஏதோ கட்டி தங்கம் வெட்டி எடுத்துன்னு பாட்ற மாதிரி இல்லே???) கட்டியா இருக்கிற தேன் கொஞ்சமா செண்ட் இத்யாதி வாசனை திரவியங்கள் சேக்கனுமாம்.. அப்புறம் இருள் இருக்கே இருள் அதையும் சேத்து (அட அது தாங்க கருப்பு கலர் டை) நல்ல கொழைச்சி பிழியனுமாம்.. அப்புறம் அதை ஒட்டு மொத்தமா ஒண்ணா சேக்கனுமாம். கூந்தல் குரூப் என்று சொல்லலாமாம். அதை ஒரு தலைமேல் வைக்கனுமாம். அப்படி இருந்த கூந்தல் அந்த தலைக்கே ஒரு சுகமான சுமையாக இருக்குமாம்...

யாரோட கூந்தல் பத்தி கம்பர் இவ்வளவு சொல்லிடப் போறார்

காரினைக் கழித்துக் கட்டி கள்ளினோடு ஆவி காட்டி
பேர் இருட் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்குகற்றைச்
சோர்குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா
நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்.

கை இல்லா ரவிக்கையை சுஜாதா ரவிக் என்று சொல்லுவார்

சும்மை...

சும்மா... சூப்ப்ப்ப்ப்பரில்லே...
நாளை சந்திப்போமா
???
... அதிகமான சுமையை கம்பர் எப்படி சொல்றார் தெரியுமா???
??. அட நம்ம ஹீரோயின் சீதையோட கூந்தல் இப்படி இருக்காம். எப்படி இருக்கு??
...??
SVNIT பேராசிரியர் ஒருவரை சமீபத்தில் பாத்தேன்.. நம்ம தேவாரம் மாதிரி முரட்டு மீசை.. பள பள மொட்டை.. என்ன ஒரு காம்பினேஷன். இது மைனஸ் மீசை = அட நம்ம சோ..
... ஆஹா இளமையை அனுபவிக்கவில்லையே என்று புலம்ப...
நாம ஒருபக்கம் நுகர் பொருள் கலாச்சாரத்தில் விழுந்து புரண்டாலும்
. வயசைக் காட்டும் வயதுமானி.
...
.
. அது என்ன? மயிர் என்றால் அவ்வளவு உயிரா அதுக்கு

No comments:

Post a Comment