Thursday, September 22, 2011

பின்னோக்குப் பயணம் - ஃபிளாஷ்பேக்


 
இந்த தமிழாக்கம் சரிதானா
? என்ற விவாதத்துக்கு இங்கு நான் வரவில்லை. எனவே... நேரா அது சார்ந்த ஒரு குட்டி கதைக்கு போகலாம். (குட்டி கதை என்றால் சிறிய கதை... என்ன செய்ய?? என் நெலமை இப்படி விரிவாக எழுதி புரிய வைக்க வேண்டியதாய் ஆகி விட்டது)

ஓர் 
. வெயில் கடுமையாய் இருக்க, ஒரு மரத்தடியே தொப்பியோடு கூடையை வைத்து விட்டு அருகில் உள்ள கிணத்தில் முகம் கழுவி வந்தான். திரும்பி வந்து பாத்தா... கூடையில் ஒரு தொப்பியும் இல்லே...திருடனாய் இருந்தால், கூடையோடு அல்லவா லாவிட்டுப் போயிருப்பானுங்க...அங்கும் இங்கும் பாத்தான். மேலேயும் பாத்தான்.. ஆஹா...குரங்குகளின் சேட்டைகள் அது. எல்லா குரங்கின் தலையிலும் ஒரு தொப்பி..

கொஞ்சம் பின்னோக்கி பயணித்து தன் தந்தை சொன்னதை நினைவு கூர்ந்தான்
... அடேய் இப்படி எனக்கு நடந்தப்போ செஞ்சதை நீயும் செய்...

சகஜ நிலைக்கு வந்தான்
. முகவாய்க் கட்டையில் கை வைத்து யோசித்தான்
.ஊரில் ஒரு தொப்பி வியாபாரி ஊர் ஊராய் சுற்றி வியாபாரம் செய்து வந்தான். ல்லா குரங்க்குகளும் அப்படியே செய்தன. தன் தலையில் போட்டிருந்த தொப்பியை எடுத்து கூடையில் போட்டான். எல்லா குரங்குகளும் தொப்பியை கலட்டி இறங்க, ஒரே ஒரு குரங்கு மட்டும் கூடை வரை வந்து, கூடையில் இருக்கும் தொப்பியையும் எடுத்து ஓடி மரத்தில் ஏறிக் கொண்டது..

வியாபாரி கோபத்துடன்
..எங்கப்பா சொன்னபடி நீங்க நடக்கலையே...கத்தினான்...

குரங்கு பதிலுக்கு

@@@@@@

இந்த மாதிரியான சுவாரஸ்யம் இருக்கிறதாலேயோ என்னவோ அது எல்லா படத்திலும் ஏதோ ஒரு காட்சியில் வந்துவிடும்.

பாட்டே இல்லாமல் வந்த ஒரு பழைய படத்தில் ஏகப்பட்ட ஃபிளாஷ்பேக் இருக்கும்
.
ஆனா இப்போ என்னவோ தெரியலை
..1980 க்கு அழைத்து செல்லும் படங்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. சுப்ரமண்யபுரத்தில் ஆரம்பித்து இப்போ இளையராஜா இசையை மையமாக வைத்து வந்த படமும் ஹிட்..

நானும் உங்களை ஒரு
1980களுக்கு கூட்டிப் போறேனே....

கல்லாரியில் ஒரு முறை நான் பெண்வேடம் போட்டேன்
. (கொஞ்சம் கலராய் இருந்து விட்டால மீசை மழிக்கும் ஆபத்து வருவதை தவிர்க்க முடியாது... சந்தடி சாக்கில் நான் கலராய் இருப்பதை சொல்லிட்டேனோ!!!)

அதில் ஒரு காட்சி
. நான் லாவகமாய் நடந்து வர வேணும். பின்னால் ரோமியோக்கள் கிண்டல் அடித்தபடி வருவார்கள்.

சின்ன டயலாக்
:

ரோட் சைட் ரோமியோக்கள்
: அன்ன நடை; சின்ன இடை; வண்ண உடை;
பெண் வேடமிட்ட நான்

@@@@@@@

அன்ன நடை என்பது பொதுவாக பெண்கள் நடைக்கு ஒப்பு சொல்வார்கள். இதே 1980களில் வந்த ஒரு படத்தில் ஒரு பாட்டு. அதில் கதாநாயகியிடம் அன்னமே நடை பயில்வதாக வரும். அவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகுமாம்.. படத்தில் வடும் நாயகியை பாத்தால் இடுப்பு என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது... நீங்க ஏன் தேட்றீங்கன்னு பாக்கீகளா... தெரிஞ்சா அதைப் பத்தி உங்களுக்கு சொல்லத்தான்..

ரொம்ம தூரம் பின்னோக்கிப் போனால் அங்கே கம்பன் குந்தியிருக்கார்
.

கம்பன்
: என்னப்பா..இன்னெக்கி என்ன ஸப்ஜெக்ட்??

நான்
: ஒண்ணுமில்லே... அன்னம் பத்தி...

கம்பன்
: போ..போ... பம்பைப் படலம் 7ம் பாட்டு பாரு...புக்கு இல்லையா??? அரிமலர் + அன்னம் போட்டு கூகுளாண்டவரை கூபிட்டு தேடு... என்னை கொஞ்சம் ஃபிரியா விடு..
தேடினேன்
..கிடைத்தது...

இராமன் ஒரு நீர் நிலையைப் பாக்கிறான்
. அங்கே எல்லா இடத்திலும் தாமரை மலர்கள். அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அன்னங்கள்..அந்த அன்னங்கள் எப்பேற்பட்ட எண்ணங்களில் இருந்தன தெரியுமா?? அழகான கட்டி முடித்த கூந்தலை உடைய சீதை சென்ற இடத்தை தெரிஞ்சி சொல்ல முடியாத நாங்க எல்லாம் (அன்னங்க்கள்) இந்த இராமனின் அழகான முகத்தைப் பாக்காமே இறந்து போயிட்டா என்ன??? என்கிற யோசனையில் இருந்த மாதிரி இருந்ததாம்...

கம்பனின் கற்பனையே கற்பனை
...

அரி மலர்ப் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரிகுழல் புக்க இடம் புகழ்கிலாத யாம்
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன எனத் தோன்றும் ஈட்டது
.
ஃபிளாஷ்பேக் தொடருதோ இல்லையோ
....கம்பர் கலாய்க்கல்கள் தொடரும்...

@@@@@@
: பல்லே ஒடை.
.. உங்க டாடி மட்டும் தான் ஃபிளாஷ்பேக் சொல்லியிருப்பாரா... எங்க டாடியும் எங்களுக்கு உங்கப்பா ஏமாத்தினதை பிளாஷ்பேக்கா சொல்லி இருக்கார். இனி நாங்க ஏமாற மாட்டோம்...
பின்னோக்குப் பயணம் - ஃபிளாஷ்பேக்

எந்திரிங்கோ.. எந்திருங்கோ...

தெனாலி என்று ஒரு கலக்கல் காமெடி படம். இதில் கமல் ஓர் ஈழத்து இளைஞரா வந்து கலக்குவார். நடிப்பிலும் இலங்கைத் தமிழிலும். இலங்கை வானொலி அறிவிப்பாளர் அப்துல்ஹமீது தான் பயிற்சியாளராம். அதில் எஞ்சிருங்கோ..எஞ்சிருங்கோ என்றால் நம்மூர், என்னங்க என்பதின் ஈழத்து வடிவாம்.. (வடிவு என்றால் அழகு... அப்போ வடிவுக்கரசி??? அவங்களும் ஒரு காலத்தில் ஹீரோயின் தான்.) இங்கே நான் சொல்ல வந்தது, எந்திரிங்கோ பத்தி..

ஊரெங்கும் எழுப்புதல் கூட்டம் என்று அடிக்கடி நடக்கிறது...அப்போ பகலில் கூடவா தூங்கறாங்க... யாரையோ.. எதற்கோ... தட்டி எழுப்பும் கூட்டம் அது..
கனவு காணுங்கள் என்றார் நம் கலாமய்யா...

நம்மாள் கேக்கிறான்..

தூங்கினாத்தானே கனவு வரும்...ஆபீஸ், கிளாஸ்ரூம் இதிலே தூங்கிடவா??? என்ன செய்ய?? ஆயிரம் கலாம் வந்தாலும் அறியாமையில் தூங்கும் இப்பேற்பட்ட ஆட்களை எழுப்ப முடியுமா??

ரொம்ப குடுத்து வைச்ச ஆசாமி.. எங்கே படுத்தாளும் தூங்கிடுவார் என்று எனக்கு ஒரு நல்ல பேர் உண்டு. ஆனால் எழுப்புதல் சிரமமான காரியம்.

அது கிடக்கட்டும்.. இறைவனை எழுப்பும் பாடல்கள் செம பாப்புலர். கௌசல்யா சுப்ரஜா ஆகட்டும், திருப்பாவை திருவெம்பாவை ஆகட்டும்.

சிறுவயதில்... மார்கழியில் அதிகாலை எழுவது மட்டும் ஏதோ எனக்கு பிடிக்காத காரியம். அதிலும் குளிரும் போது போத்திப் படுப்பதில் சுகமே சுகம்....அலாதி சுகம்.

ஒரு முறை நான் எழுந்து கோவிலுக்கு போய் வந்து விட்டேன்.

எல்லாருக்கும் ஆச்சரியம்.. எப்படி? என்று.. நானும் சாட்சிக்கு உலர்த்திக் காய வைத்திருக்கும் துண்டு & ஜட்டியினை காட்டினேன். எல்லாரும் நம்பிவிட்டார்கள். குளிருக்குப் பயந்து குளிக்காமல், அவைகளை மட்டும் நனைத்துக் காயப் போட்டு விட்டு கோவிலுக்கு போனேன் என்பதை என் பையனிடம் ஜாலியான நேரத்தில் ரொம்ப வருஷம் கழித்து உளறிவிட்டேன்.

அதை அப்படியே என் அம்மாவிடம் போட்டும் கொடுத்து விட்டான்.

ஒரு நாள் என் பையன் கேட்டான்... ஏன் இந்த IT ஆட்கள் ராவெல்லம் முழிக்கனும்? என்று. நான் சொன்னேன், இங்கே இரவு... அமெரிக்காவில் பகல்..அதான் நாம் அவர்கள் பகலுக்காக இந்தியாவில் ராவெல்லாம் முழிக்கிறோம். அவன் கேள்வி தொடர்ந்தது.. எப்போ அவங்க நம்ம பகலுக்காக ராத்திரி முழிப்பாங்க?? நான் பதில் தெரியாமல் முழித்தேன்.. 2020 என்று

பதிலும் பையன் சொன்னான்...

கலாமய்யாவிடம் ஒரு பத்து நிமிடம் அந்தமான் வந்தபோது பேசி இருக்கிறான்... வருங்காலம் யோசிக்குது..

தூங்குறது இருக்கட்டும்... எழுப்பும் கலை பற்றி யோசிக்கலாமா??? தூங்கும் ஆளை எப்படி எழுப்ப?? தூங்கும் ஆளை எழுப்பலாம்...தூங்குவது மாதிரி நடிப்பவனை எழுப்புவது கஷ்டம். (இதை எந்த வாய் சண்டையின் கிளைமாக்சிலும் தவறாமல் கேக்கலாம்)

ஹஜாரே போர் ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது அரசியல் வாதிகளின் முகத்தில் கவலை ரேகைகள். இங்கும் அரசு வட்டாரத்த்லும் சோகமோ சோகம்... எனக்கு ஒர் பழைய படத்தில் வில்லன் வீரப்பா பேசிய டயலாக் ஞாபகம் வந்தது. ... தூங்குறவனை தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும் கொடுத்து தலையையும் நீட்ட சொல்கிறான்...
இது ஒரு பக்கம் இருக்கட்டும்...

நான் சிறு வயதில் செய்த சேட்டைகளை என்பையன் இப்போ செய்கிறான். அவனை எழுப்புவது மிகவும் சிரமமான காரியம். அவங்க அம்மா பொறுமை தன் லெவல் மீறி கத்தினால் தான் எந்திரிப்பான். ஆனா... அவனுக்குப் பிடிச்ச பொம்மை ஹெலிகாப்டரை ஓட விட்டு அந்த சத்தம் மட்டும் கேட்டால் போதும் எழுந்து விடுவான்.. (ஆமா..அதுக்கு 500 செலவு & அடிக்கடி பேட்டரி வேற மாத்தனும்)

சிமெண்ட் மூட்டையை அடுக்கி வெளியே எடுக்கும் போது..FIFO (First In First Out) என்பதை கையாள வேண்டும் அதே மாதிரி.. 2 மணி நேரத்தும் முன்னால் borading Pass வாங்க போகும் என் மதிரி ஆட்களின் லக்கேஜ் (FILO - First In Last Out ) தான். தூங்கும் போது காது தான் கடைசியில் தூங்கப் போகுமாம். எனவே இந்த FILO முறை எழுப்ப ஏதுவானதாம்.. கண்ட இடத்தில் தட்டி எழுப்பினால் விவரீதங்கள் வருமாம்.. அப்போ எழுப்பும் முறை தான் என்ன?

அதுக்கு The School of Sleepalogy க்கு போனா..என்ன??

அட.. அங்கே நமக்குத் தெரிஞ்ச பேர் தான்... Dr Kambar அங்கே தான் இருக்கார். விசாரிச்சா போச்சு...

எல்லாரும் பிரிஷ்கிருப்சன்லே மருந்து மாத்திரை தருவாங்க...இவர் பாட்டு எழுதி தந்தார்..

வாலியின் வதம் முடிஞ்ச கொஞ்ச நாளுக்கு அப்புறம்... சுக்ரீவன் கொஞ்சம் அதிகமா குடிச்சி ஓவர் ஹேங்க் ஆகிவிட, Govt Office மாதிரி No Response.

கோவமா இலக்குவன் வந்து விசாரிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட நம்ம ஜுனியர் அங்கதன், சுரீவனை எழுப்புறார்... இதெப் பாத்து எழுப்பும் விதம் கத்துக்குங்க...

பொன்போன்ற காலடியை நன்றாகப் பிடித்துக் கொடுத்து தடவி துயில் எழுப்பனுமாம்... இது எப்படி இருக்கு??.. நாளைக்கு ஒரு டிரையல் அவங்கவங்க கணவன்/மனைவியினை இப்படி எழுப்பிப் பருங்களேன்..

(வீட்டிலே சண்டை சச்சரவே இனி இருக்காது.. அதான் காலைப் பிடிப்பது கை வந்த கலையாகிவிடுமே!!!)

போனபின் தாதை கோயில் புக்கு அவன் பொலங் கொள் பாதம்
தான் உறப்பற்றி முற்றும் தை வந்து தடக் கைவீர
மானவற்கிலையோன் வந்து உன் வாசலின் புறந்தான் சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான்.

குடும்ப சிக்கல் தீர தேடல்கள் தொடரும்...

அன்னா என்றாலும் அன்பு...

அன்னா
(ஹஜாரே) என்ற ஒரு தனி நபர் இந்த தேசத்தையும் தேசத்து மக்களையும் எவ்வளவு நேசிக்கிறார் என்பதை உலகமே பாத்து வருகிறது. ஊன் உறக்கம் துறந்து மக்களை தட்டி எழுப்பி நிற்கும் வேகம்... அன்பு...அன்பு... தேசத்தின் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் சான்று
.ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் தாயின் மீது பாசமாகவும் தாய் நாட்டின் மீதும் பாசமாய் இருப்பர் என்று போன சனிக்கிழமை இந்த நாள் இனிய நாளில் சுகி சிவம் சொன்னார்

தாய்

நம்ம அன்னா ஹஜாரேவும் அதுக்கு விதி விலக்கு இல்லை என்று கருதலாமா???

இதே போல் கருவில் குழந்தை இருக்கும் போது தாய்க்கு என்ன பிடிக்குமோ
, அது தான் குழந்தைக்கும் பிடிக்குமாம். என் பையனுக்கு சிக்கன் என்றால் ரொம்பப் பிடிக்கும். காரணம் தேடினால் வீட்டில் சண்டை தான் வருகிறது...

சீனிவாஸ அய்யங்கார் அவர்கள் தன் குழந்தை இல்லாள் வயிற்றில் இருக்கும் போது
, சகல கலைகளையும் பரீட்சயம் செய்தனராம்.... அதனால் தான் அந்த குட்டி பையன் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று பாடி அப்புறம் சகலகலா வல்லவனாய் ஆனதாம்... வித்திடப்பட்ட இடம் பரமக்குடி.

தாய்ப்பாசம் அதிகம் உள்ளவர்கள் தவறான ஆட்களாகவும் இருக்க வாய்ப்பில்லையாம்
. புராண கால சந்நியாசிகளான ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் கூட எல்லாம் துறந்தாலும் தாய்ப் பாசத்தை துறவாது இருந்தனர்.

வீர சிவாஜி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்
. அவரைக் கொல்ல ஒரு வீரன் வருகிறான். எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்கிறான். சிவாஜி விசாரிக்கிறார். ஏன் என்னைக் கொல்ல வந்தாய்?

வீரன் சொல்கிறான்
... எனக்கே சாப்பாட்டுக்கு வழியில்லை..இதில் என் வயதான தாய்க்கும் சோறு போட வேண்டும். பாத்தேன். உங்க எதிரி என்னிடம் வந்தான். பணம் அதிகம் தெருவதாய் சொன்னான். அட்வான்ஸ் கொடுத்தான். என் அம்மா பசி ஆறியது.. நான் உங்களைக் கொல்ல வந்தேன்.

சிவாஜியின் கண் கலங்கியது
... சே..என் ஆட்சியில் இப்படி ஒரு இளைஞனுக்கு இப்படி ஒரு நிலையா என்று....

மெய்க் காப்பாளர்களைக் கூப்பிட்டான்
. இவனை விட்டு விடுங்கள்.. நாளை காலை சபைக்கு வரட்டும்.. மற்றதை நாளை பேசிக் கொள்ளலாம் என்றார் சிவாஜி the Great.

அமைச்சர்கள் தயங்கினர்
. உங்க்களை கொல்ல வ்ந்தவன். அவன் மீது நம்ம கஸாப் மீது காட்டும் கருணை மாதிரி காட்டுவது அவ்வளவு நல்லதில்லை. இவன் ஓடிப் போய் விடுவான். நாளை வரமாட்டான் என்று ஆலோசனை சொன்னார்கள்.. (யதார்த்தம் தெரிந்த அமைச்சர்கள்)

சிவாஜி ஒத்துக்கலை
. தாய்க்காக என்னையே கொல்ல வந்தவன் நாளை கண்டிப்பாய் வருவான். இது சிவாஜியின் நம்பிக்கை..

அந்த நம்பிக்கை வீன் போகவில்லை
. மறு நாள் வந்தான். அவன் பின்னாளில் வெற்றித் தளபதியாய் சிவாஜிக்கு உறு துணையாய் இருந்தது வரலாறு.

ஒரு துறவியைப் பார்த்து ஒரு வெளிநாட்டு யுவதி கேட்டாராம்
... I want to Marry You... இப்படி நம்ம சாமியர்கள் கிட்டே கேட்டா என்ன பதில் வந்திருக்கும்??

கேமிரா இல்லாத நேரமா வா
...

என் மனைவி இல்லாத நேரமா வந்து சொல்லி தொலைச்சா என்ன
???

ஆனா நம்ம துறவி அந்த யுவதியைப் பாத்து கேட்டராம்

Lady: I wish to get a child like you with spritual knowledge & wisdom.
.... Why do you want to marry me?

துறவி யோசித்தார்
... நான் உண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் இது சாத்தியமா என்று தெரியவில்லை.... உன்னை மாதிரி அதிகமா ஆசைப்படற கொழந்தை பிறந்துட்டா???...என்ன செய்வது???

ஓகே
..ஒண்ணு செய்யலாம். என்னை இப்போதே மகனாக ஏற்றுக் கொள்... தாயே... என்னை ஆசிர்வதி ... என்று காலில் விழௌந்தாராம அந்த விவேகமுள்ள துறவி விவேகானந்தர்.

வாய்ப்பு கிடைத்தால் யாரை எப்படி மடக்கலாம் என்று இருக்கும் உலகில் தாய்ப் பாசத்தை ஒரு உன்னத வழியாய்க் காட்டிவர் அந்தத் துறவி
.

கம்பர் மட்டும் அதுக்கும் சளைத்தவரா என்ன
??

கொஞ்சம் கிஷ்கிந்தாவுக்கு வாங்க
... அங்கே லட்சுமணன் கோபமாய் (வழக்கம் போல்) வந்து கொண்டிருக்கிறான். நடுவே வந்து இடை மறிப்பவள் தாரை... அப்போது மாமியார் கூட்டத்தின் நடுவே இருக்கும் மருமகன் போல் வெட்கிப் போய் இருந்தானாம் இலக்குவன்... பெண்களை ஏறிட்டுப் பாக்கவும் தயங்ககும் இளவல், தாரையைப் பாத்தான்... முழுமதி போன்ற முகம்...ஆனால் அது பகலில் வந்த காரணத்தால் அவ்வளவு ஜொலிக்கவில்லையாம். வாலியைப் பிரிந்த சோகம் இருக்காதா பின்னே???

அந்த நேரத்தில் நம்ம
Second Hero தாரையைப் பாத்து சைட் அடிக்கவில்லை. தாரையைப் பாத்தவுடன் நம்மாளுக்கு தன் தாயாரான சுமித்திரை ஆகியோர் தான் ஞாபகத்துக்கு வந்தாகளாம்.. அப்படி வந்து வருத்தமும் கூடவே வந்ததாம்..

ஆர்க்கொலோ உரை செய்தார் என்றருள் வர சீற்றம் அஃக
பார்குலாம் முழு வெண்டிங்கன் பகல் வந்த படிவம் போலும்
ஏர்குலாம் முகத்தினாளை யிறை முகம் எடுத்து நோக்கி
தார்குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைத்து நைந்தான்

பண்பை வளர்க்க உதவும் காவியம் தான் கம்பராமாயணம்
..
 
.

வாத்தியார் ஸ்டைல்

இன்று ஆசிரியர் தினம்
.. ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிந்த வகையில் இன்றைய தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
சுவற்றில் எழுதாதே என்று எழுதி வைத்த காலம் போய்

ஆசி
ரியர் தின வாழ்த்துகளாய் சிலரும்
, தங்கள் ஆசிரியரின் புகைப் படங்களோடு சிலரும், Profile Photo வையே டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஃபோட்டாவாய் மாற்றியும் விட்டனர் சிலர்.
அப்போ நாமளும் ஏதாவது செய்யனுமில்லே
... இல்லாட்டி சமூகத்தை விட்டு விலகின மாதிரி இல்லே இருக்கும்??

நானும் என் ஆசிரியர்கள் பத்தி யோசிச்சேன்
.. பரமக்குடியில் தமிழ் பாடத்தை அறிவியல் போல் நடத்திய திரு இராமச்சந்திரன் அவர்களால் தான் என் தமிழ் ஆர்வம் இன்னும் குறையாமல் இருக்கு..

மேல் நிலையில் என்னை மேலும் தூக்கி விட்ட ஆ வை பள்ளியின் மணி சாரை மறக்க முடியுமா
??

ஆனா வாத்தியார் என்றவுடன் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நம்ம புரட்சித் தலைவர் தான்
.
சோ தான் வாத்தியார் என்று பெயர் வைத்தார் என்று நினைக்கிறேன்
(நம்நாடு, எங்கள் தங்கம்..இப்படி பல படங்களில் சோ வை வாத்தியாரோடு பாக்கலாம்.)

ஆனா சோவுக்கு தன்னை யாராவது வாத்தியாரேன்னு கூப்பிட்டா புடிக்காதாம்
!! அதைவிடக் கேவலமா சிலர் என்னை தலைவான்னு கூப்பிட்றாங்க என்பார்..
வாத்தியாரின் தலையாய கடமை என்ன
??

எங்காவது அபலைப் பெண்களுக்கு ஆபத்து என்றால் ஓடி வந்து காப்பத்த வேண்டும்
... இது வாத்தியார் ஸ்டைல்..

பிற்காலத்தில் இதே உத்தியை பயன்படுத்தி பல படங்களில் சீரியஸாகவும் சில படங்களில் காமெடியாகவும் கலக்கி இருக்காங்க
..

விவேக் ஒரு படத்தில் நல்ல பேர் வாங்க நினைத்து உடைந்த கன்னாடித் துண்டு போட்டுவிட்டு அதனை காலில் குத்தும் தருவாயில் வாத்தியார் ஸ்டைலில் தடுக்கலாம் என்று ஐடியா செய்ய
.. அது சொதப்பி செம காமெடியில் முடியும்...

நம்ம கமலின் கலக்கல் படமான அவ்வை சன்முகிவிலும் அதே டெக்னிக்
... அதே சொதப்பல்...
அந்தப் படத்தில் நான் ரசித்த டயலாக்
ஆனா மெய்யாலுமே ஊமைதான்..."

ஆனா என்னோட இப்போதைய வாத்தியார்
... கம்பர் சார் தான்..

என்ன வாத்தியாரே
.. கம்பர் சார்... இதைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? ராமாயணத்தில் ஏதாவது வாத்தியார் ஸ்டைல் இருக்கா.. சொல்லுங்க வாத்தியாரே...

கம்பர் தொடர்கிறார்
..

நீங்க ரோட்டோரம் போயிட்டே இருக்கீங்க
.. உங்களுக்கு சம்பந்தமே இல்லாமே யாரோ சிலர் ஒரு ஃபிகரை ஈவ் டீசிங்க் செய்ராங்க.. அப்போ நீங்க என்ன செய்வீங்க?? அந்த தடிப் பசங்களோட சண்டை போடுவீங்க.. அடி உதை கூட வாங்குவீங்க.. ஏன் உயிரைக் கொடுக்கவும் தயாரா இருப்பீங்க.. உலகமே இப்படி இருக்க நான் என்னை நம்பி வந்த சீதையின் துயரை போக்க முடியாத ஆளாயிட்டேனேன்னு இராமன் புலம்புறார்..

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ்சமத்து
ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்
.

வாத்தியார் ஸ்டைலைக் கண்டுபிடித்தவர் கம்பர் தான் என்கிறேன் நான்
..

என்ன
... வாத்தியாரே... நீங்க என்ன சொல்றீங்க...???
... நாசர் சொல்லும் டயலாக்..." நான் முஸ்லீம் தான்..
 
, fb ல் என் சுவற்றில் எழுதுங்கள்.. என்று கெஞ்ச்சிக் கூத்தாடும் நிலை இன்று.

Saturday, July 9, 2011

கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு

கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு என்று ஒரு பாட்டு பாடி அனுராதாஸ்ரீராம் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆயிட்டாங்க... [ஆனா அவங்க கலர் ஒன்னும் கருப்பு கிடையாது... நல்ல கலர் தான்]

ஆனா அந்தப் பாட்டில் கருப்பா இருக்கும் எல்லாத்தையும் புடிச்சி ஒரு பெரிய்ய்ய்ய லிஸ்டே போட்டிருப்பாங்க...

எல்லாத்தையும் தூக்கிக் சாப்பிடும் ஒரு டயலாக் வடிவேல் காமெடியில் வரும்

அவன் பயங்கர கருப்பா இருப்பான்

ஆனா நீ கருப்பா பயங்கரமா இருக்கே...

எது எப்படியோ கருப்புக்கு நம்மாளுங்க இவ்வளவு வக்காலத்து வாங்கினாலும் மார்க்கெட்டில் அதன் வேல்யூ கம்மி தான். அது கல்யாணமாய் இருந்தாலும் சரி வேறு எதுவாய் இருந்தாலும் சரி..

சுனாமி வந்த ஞாயிறை கருப்பு ஞாயிறு என்று தான் சொல்கிறார்கள்...

சுனாமியை நேரில் பாத்த நமக்கு அப்படி ஒன்றும் அது அவ்வளவு கருப்பானதாய் தெரியலை...

இங்கே ஒரு கருப்பு பத்திய கம்பேரிஷன் வருது.. கொஞ்சம் பாக்கலாமே...

1. அது தொட்டு உணரக் கூடியதாய் இருந்தது
2. ஒரு விம் பார் போட்டு கழுவினா... பாத்திரமே விம் பார் மாதிரி ஆயிடுமாம்.. (அடே.. இதுவும் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் மாதிரி இருக்கே... )
3.பல கருப்புத் தூண்கள் மாதிரி
4. ஒரு மரத்தை வெட்டுவது மாதிரி (தேவைப்பட்டால்) வெட்டக் கூடியதாய் இருந்திச்சாம்...
5. இத்தனைக்கும் பின்னாடி... பாக்குறதுக்கு சூப்பரா ...இனியதாய் இருந்திச்சாம்...

இது எப்படி இருக்கு???

சிதையைப் பத்தி கேட்ட மாத்திரத்தில் ராவணன் வீட்டில் வந்த இருள் இப்படி இருந்ததாம்...

ஒரு சின்ன திருத்தம்... வந்த இருள் அல்ல... வரவழைக்கப் பட்ட இருள்.....

ஆமா... நான் ஆணையிட்டால் அந்த பிறை மறைந்து விட்டால் ... ரேஞ்ச்சில் இராவணன் பாடாமல் ஆணை இட, பிறை அப்படியே மரை கலண்டு போய் ஓட...இருள் வந்ததாம்...

இது கம்பனின் கற்பனை...

இதெல்லாம் எங்கே கம்பன் சொன்னான் ??? சும்மா சரடுன்னு .. யாராவது கேக்கிறீங்களா...??

அப்போ பாட்டும் போட்டுடறேன்... அரத்தம் புரிஞ்ச்சா படிங்க...இல்லாட்டி... அடுத்த மெயிலு படிங்க...

ஆண்டு அப்பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம்
தீண்டதற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி
வேண்டின் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி
காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி

கதை கந்தல் ஆன மாதிரி ஏதோ கம்பர் சொல்ற மாதிரி இருக்கு இல்லே...???

மீண்டும் சந்திப்போம்

பாசக்காரப் பயலுவ

ஒரு படத்தில் நடிகர் கார்த்திக் & ரமேஷ் கண்ணா டீம், செம காமெடி செய்வார்கள் .... ஒரு கோவிலுக்குள்.. ஞாபகம் இருக்கா??

கார்த்திக் கையில் திருடின ஒரு உண்டியல். சாமி முன்னாடி விபூதி வச்சி ஒரு வட்டம் போடுவார். உண்டியல் காசெல்லாம் தூக்கி போட்டு, வட்டத்துக்குள் விழும் காசு எல்லாம் சாமிக்கு. மிச்சம் மீதி கொஞ்ச்சமா ஏதோ இருந்தா ..அது எனக்கு..என்பார் கார்த்திக்...

அதுக்கு பதிலுக்கு... ரமேஷ், சாமி .. உன்னையெல்லாம் ஒரு வட்டத்துக்குளே கொண்டு வர நான் விரும்பல்லே.. நானு எல்லாத்தையும் தூக்கி போட்றேன். உனக்கு வேணும்கிற எல்லாத்தையும் எடுத்துக்க.. எனக்கு ஏதோ கொஞ்ச்சம் குடு என்பார்..

சாமியை ஆசாமிகள் படுத்தும் பாடு.... படாத பாடு தான்.

சமீப காலமா கோவில் குளங்க்களில் கூட்டம் அதிகமா தென்படுது.. அதுவும் சிறப்பு பூஜைளில் சனி பகவான், குரு பகவான் இத்யாதி பூஜைகள் இன்னும் தடபுடலா நடக்குது.. வழிபாடுகளை விட பிராயசித்த தலங்கள் தான் இப்போ ரொம்ப பாப்புலர்.

என்ன வென்னாலும் தப்பு பன்னலாம். காசிக்குப் போய் அக்கவுண்டை Nil Balance க்கு கொண்டு வரலாம்கிற நம்பிக்கை நம்ம மக்கள் கிட்டே சூப்பரா பதிஞ்ச்சி போச்சு...

சமீபத்திய பிரதோஷம் அன்று அரக்கோணத்தில் இருந்தேன். கோவில் பக்கம் தலை காட்டப் போனா.. அது ஏதோ மகளிர் மாநாடே நடக்கிற மாதிரி... எங்கும் மகளிர் மயம்.. இரு பாலரும் வழிபட்ட பூஜை சமீப காலமா எப்படி மகளிர்க்கு போச்சி???. இதுவும் சமீபத்திய மாற்றம் தான்..

வேண்டுதலில் பல ரகம்... பலர் கோவிலுக்கு போய் சாமி கிட்டே அகிரிமெண்டே போடுவாங்க... ஆனா ஒண்ணு... சொன்னதே கரெக்ட்டா செஞ்ச்சிடுவாய்ங்க.. இல்லாட்டி சாமி கண்ணு குத்திடாது??? அந்த பயம் மட்டும் தான் அந்த காலம் தொட்டு மாறாம இருக்கு.

ஆசாமி சாமியிடம் வேண்டுவது இப்படின்னா...

ஓர் ஆசாமி..ஆசாமியிடம் வேண்டுவது பத்தி கொஞ்சம் பாக்கலாமா??

இதுவும் ஒரு பாசமலர் கதை தான்.. எந்த அண்ணன் தங்கை கதையாய் இருந்தாலுமே..அண்ணன் தங்கையிடம் ஏதாவது வேணுமான்னு கேக்கும். அதுக்கு ஒன்னோட பாசம் தான் பெருசு.. வேறு ஒண்ணுமே வேணாம்கிற மாதிரி வரும்.

ஆனா ஒரு சேஞ்சுக்கு வித்தியாசமாய் தங்கை கேட்கும் இடம் வருது... கேக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பிட்டு வேறே போடுது...

அண்ணா பெருசா உள்ளதை நீ வச்சிக்க... இத்துனூண்டா உள்ளதே எனக்குக் குடு..

இந்த உலகமாதா பெரிய்ய தாதா மாதிரி ஒரு பெரிய்யய பெல்ட் பொட்டிருக்காம்.. அது தான் கடலாம். பெல்ட்ன்னு சொன்னா கொஞ்சம் டிசைன் வேணுமே... இருக்கே..அதான் மீன்.

அது சரி..திடீர்னு உலகம் எதுக்கு?? அந்த உலகமே அன்னாந்து பாக்கிற ஒரு சங்கதி...ஒரு பெண்.. அவளோட முடிகூட தள்ளாடுமாம்... ஏன் தெரியுமா?? அவ பூ வச்சிருக்கா... பூ தேன் வச்சிருக்கு... அதிலிருந்து தேன் வடிஞ்சி அதை அந்த முடி சாப்புட்டு போதையில ஆடுதாம்...

அப்புறம் வழக்கம் போல் சின்ன இடை... அந்த மான் மாதிரி அழகி... அவளை நீ வச்சி விளையாடு.

ஆனா அவ கூட ஒரு பொடியன் இருகான்... நீ தான் வீரனாச்சே ... நீ வீரன்னு எனக்கு தெரியும். உலகம் தெரிஞ்சிக்க வேணாமா??? அந்தப் பொடியனைப் பிடிச்சி எனக்கு விளையாடக் குடு.

கேட்ட அந்த பாசக்காரப் பயலுக யார் தெரியுமா??
சூர்ப்பநகை யும் இராவணனும் தான்.

சீதை & ராமனைக் குறித்து தான் கேட்டது என்று தெரிஞ்ச்சிருக்குமே..

இதோ கம்பரின் வரிகள்:

மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்.

இந்தியா முழுக்க லோக் பால் பத்தி யோசிக்க.. நானு இந்த என்பால் பத்தி யோசிக்கிறேன்...

மீண்டும் வருகிறேன்.

குத்து வசனம் .... பஞ்ச்.டயலாக்...

சாதாரனமாக வசனம் என்று பேசப்பட்ட ஒரு சங்கதி இப்போது பஞ்ச்...டயலாக் குத்து வசனமாக மாறி விட்டது. அந்தக் காலத்துலெயும் இந்த மாதிரி குத்து வசனங்கள் இருக்கத்தான் செஞ்சது.

ஓடினாள் ஓடினாள்...இப்படி யாராவது ஆரம்பித்தால், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று கண்டிப்பா யாராவது முடித்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு பாப்புலரான வசனம் அது.

சபாஷ் சரியான போட்டி என்பது இந்த ரகம் தான்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்... நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி... சிங்கம் சிங்கிளா வரும் போன்றவை ரஜினி மூலம் பிரபலமான குத்து வசனங்கள்.

இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் என்று ஒரு அசத்தல் காமெடி படம் ... அதில் ஓர் ஆதிவாசி பெண் கல்யாணம் வரும். கல்யாணத்தின் பிறகு கலங்கி ஒரு டயலாக் வரும். அதை ஆதிவாசி மொழி தெரிந்தவர் மொழி பெயர்ப்பார்.

முதல் மொழிபெயர்ப்பு இப்படி வரும்: "நான் என் கண்ணையே ஒங்கிட்டே ஒப்படைக்கிறேன்"அடுத்த வரியை மொழிபெயர்த்து சொல்லும் முன்...அது எனக்கு தெரியும் "அதுல நான் எப்போவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பாக்கனும்" என்று முடிப்பார்.

அட... ஆதிவாசி பாஷை தெரியுமா?? என்று முழிப்பாய்ங்க...

இந்த காலத்து வாண்டுக கூட இந்த டயலாக்கை பிச்சி உதற்றாங்க... சமீபத்தில் என்னோட பொண்ணை போர்டிங்க் ஹாஸ்டல்லே சேத்துட்டு வரும் போது... அங்கே ஹாஸ்டலில் இருக்கும் வாண்டுகள் "அங்கிள்...உங்க கண்ணை எங்க கிட்டே குடுத்திட்டீங்க... நாங்க அதுலே ஆனந்தக் கண்னீர் வர்ர மாதிரி பாத்துக்குவோம்" னு தூள் கிளப்புறாய்ங்க... என்னத்தே சொல்ல...

இன்னும் இதே மாதிரி பாப்புலரான ஒரு சூப்பர் டயலாக் இருக்கு...."போகனுன்னு தான் தோன்றது..ஆனா எங்கே போவனும்னு தோணலையே....நேக்கு யாரைத்தெரியும்..."

சென்னைக்குப் போய் லோல் படுவதற்கு முன்னால் விவேக் ஒரு படத்தில் அடிக்கும் டயலாக் ஒன்று...வீட்டை விட்டு போகும்படி சென்னவுடன்...அழுத முகமா வச்சிட்டு.."அப்படி மட்டும் சொல்லிடாதீங்க...எனக்கு யாரைத் தெரியும்????..."... திடீர்னு குரல் மாத்தி..."அப்படி மட்டும் சொல்லுவேன்னு பாக்காதீங்க...சென்னைக்கு போறென்...." என்று வரும்...

ஏதாவது ஏடாகூடமாகவோ... அல்லது நல்லதோ சொல்லி விட்டு...இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் வித்தையில் விவேக் கலக்குவார்...

அது சரி... கொஞ்சம் இருங்க... பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் வந்திருக்கு பாத்திட்டு வர்ரேன்...

அடடே... கம்பர் ஒரு போஸ்ட் செஞ்ச்சிருக்கார்... ஓ கே... இந்த விவேக் மேட்டரையும் கம்பர்கிட்டே கேக்கலாமே... இந்த சித்து விளையாட்டை அவர் செஞ்ச்சிருக்க மாட்டாரா என்ன???

கேட்டவுடன் பதில் வந்தது... கம்பன்ன்ன்டா....

இராவணனுக்கு ஏதாவது ஆப்பு வைக்கனும்னா...அது யாரால முடியும்?? இது கேள்வி.

பதிலுக்கு கம்பர் சொல்லும் பதில் என்ன தெரியுமா???

புலித்தோலை சர்ட் மாதிரி மாட்டியிருக்கும் சிவன்
பீதாம்பரம்..அதுவும் பொன்னாலானது...ஆடையா வச்சிருக்கும் விஷ்ணு..
தாமரைப் பூவில் குந்தியிருக்கும் பிரம்மன்
இவங்களால் தான் ஆப்பு வைக்க முடியும்...என்னு நெனைச்சா...அது தான் இல்லை.

கம்பர் பண்ற சேட்டை பாத்தீங்களா???

பாட்டும் பாக்கலாமா??

புலியின் அதன் உடையானும் பொன்னாடை
புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்;

இந்த அல்லர் இல்லாம படிச்சா... வேற அர்த்தம்...அதோடு படிச்சா வேறு ஒரு அர்த்தம்...

கம்பர் கூட அந்த காலத்தில் விவேக் மாதிரி காமெடி செஞ்ச்சிருக்காரே...

இன்னும் தேடுவேன்...